தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முதலில் இருப்பவர் நடிகர் விஜய், இவர் தற்போது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன், மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் உள்ளிட்ட முக்கிய பலரும் நடித்து வருகின்றனர்.
இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் இம்மாதத்தின் இறுதிக்குள் முடிவடையும் என்ற தகவலும் வெளியானது. மேலும் எவ்வித சர்ச்சைகளும் இன்றி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் லியோ திரைப்படத்தின் டைட்டிலுக்கு ஓர் வில்லங்கம் எழுந்துள்ளது.
அதில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் , லியோ திரைப்படம் குறித்து பேசுகையில் , அன்பு தம்பி விஜய்க்கு நான் ஓர் கோரிக்கை வைக்கிறேன். லியோ திரைப்படத்தின் டைட்டீல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் மாற்றுங்கள், தமிழில் டைட்டீல் வைத்தால் தான் படத்திற்கு எவ்வித வில்லங்கமும் வராது என்றார். மேலும் பேசிய அவர் இதுவரை வெளியான திரைப்படங்கள் அனைத்திற்குமே ஆங்கிலத்தில் டைட்டீல் வைத்தது இல்லை.
லியோ என்ற டைட்டீல் ஆங்கிலத்தில் இருப்பது அவ்வளவு நன்றாக இல்லை என்றார். இருப்பினும் இது குறித்து நடிகர் விஜய்யின் தரப்பில் இருந்து எவ்வித பதில்களும் அளிக்கப்படாமலே இருந்து வருகிறது. இவ்விஷயத்தை விஜய்யின் தரப்பில் இருந்து ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டைட்டீல் – ம் ஆங்கிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்வித சர்ச்சைகளும் இன்றி நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் சீமான் இப்படி ஒரு வில்லங்கத்தை கொண்டு வருவது கவனம் பெற்று வருகிறது.