தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் திகழ்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தசை சம்மந்தப்பட்ட நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகளில் இருந்து விலகி இருந்த நடிகை சமந்தா சமீபத்தில் சற்று குணமடைந்த நிலையில் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.
நடிகை நயன்தாராவை தொடர்ந்து கதாநாயகி கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிகைகளில் சமந்தாவும் ஒன்று.இதில் சமீபத்தில் வெளியான திரைப்படம் யஷோதா, மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சரித்திர கதையம்சத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது.இத்திரைப்படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார், மேலும் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இத்திரைப்படத்தின் பாடல்கள் , டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வந்தது, இத்திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பாரதவிதமாக படக்குழு தள்ளிவைத்துள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகயுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் , சமந்தாவை திரையில் காண இருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் இருந்து வருகின்றனர்.