தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின் தற்போது நடிகர் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நடிகை ராஷ்மிகா சமீப நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இதுபோன்று சமீப நாட்களுக்கு முன் ராஷ்மிகாவுக்கு கன்னட திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படாது, அவர் கன்னப்படங்களில் நடிக்க தடையும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் எனக்கு எதிராக பல்வேறு வகையில் தவறான கருத்துக்கள் பரப்பி வருகின்றனர். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை, மேலும் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் பையன் மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள், உடற்பயிற்சியை நிறுத்தினால் உடல் பருமன் என கிண்டலடிக்கின்றனர்.எதேனும் பேசினால் வீன் வதந்தி வருகிறது என பேசாமல் இருந்தால் திமிரு என பட்டம் கட்டுகிறார்கள், நான் என்னதான் செய்வது?
ஒரு கட்டத்தில் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவை விட்டு விலக வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்களா, என்னிடம் உங்களுக்கு என்னதான் பிரச்சனை , உங்கள் வார்த்தைகள் அனைத்தும் என்னை மன ரீதியாக காயமடைய செய்கிறது.இதனை தொடர்ந்து நான் சமீபத்தில் நடித்த வாரிசு திரைப்படத்தில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என நான் கூறியதாக செய்திகள் வெளிவருகிறது, உண்மையில் எனக்கு அதுபோன்ற எண்ணம் கூட இருந்தததில்லை, நான் வாரிசு திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்கவே விரும்பினேன் காரணம் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். நான் செய்யாத அனைத்தையும் செய்ததாக கூறி வதந்திகள் வெளிவருகின்றன என வருத்தமாக கூறியிருக்கிறார்.