தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒன்று. கன்னட திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பல மொழி படங்களில் வாய்ப்புகள் பெருக பெருக, தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழில் நடிகர் கார்த்தியுடன் நடித்து சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தற்போது நடிகர் விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்திருந்த கன்னட திரைப்படத்திற்கு பின்னதாக நடிகர் விஜய் தெவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரீட்சையமானார் ராஷ்மிகா.
இதனை தொடர்ந்து ரிஷப் செட்டியுடன் காதலில் இருப்பதாக தெரிவித்து, அவரை திருமணம் செய்து கொள்ளவும் நடிகை ராஷ்மிகா முடிவு செய்திருந்தார். அதன் படி அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்தது. எவ்வித பிரச்சனைகளும் இல்லாத சமயத்தில் அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருக்க , தனது திருமண வாழ்க்கை வேண்டாம் , கவனம் செலுத்த முடியவில்லை , என அதிலிருந்து விலகி தற்போது நடிப்பதில் மட்டுமே, தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற, நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த நடிகை ராஷ்மிகா அவரது கன்னட படம் குறித்து பேசியிருந்தார். இருப்பினும் முதல் படமான கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்த ரிஷப் செட்டியை பற்றி ஏதும் பேசாமல் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கன்னட திரைப்பட ரசிகர்கள் , தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை மறந்து, மற்ற மொழி படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எனவே அவர் மீண்டும் கன்னட திரையுலகிற்கு வருதல் கூடாது, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும் கூடாது என தடைவிதிக்கப்பட்டு அறிவுப்பு வெளியாகியுள்ளது.