பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் மிகவும் முக்கியமானவர்கள் தான் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்.
பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் பெரும்பாலான நடிகர்கள் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர், அதன் வகையில் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனை ஆறு வருடங்களாக தீரா காதல் செய்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரின் திருமணம் பெரும் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவர் குறித்த தகவல்கள் அதிகம் இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும், இருவரும் தற்போது வரை ஒற்றுமையான தம்பதியாகவே வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றில் இருவரும் பங்கேற்கும் பொழுதுகளில் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோனை மேடையில் அங்கீகரிக்காமல் இறங்குவதேயில்லை. என் வீட்டு மகாலட்சுமி என்றெல்லாம் மேடையில் அவரை பெருமைப்படுத்தியுள்ளார், அதனோடு சமூக வலைத்தளங்களிலும் இருவரும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவர்.
மேலும் பாலிவுட் தம்பதிகளில் தீபிகா மற்றும் ரன்வீர் இருவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே தற்போது வரை இருந்து வருகிறது. இவர்களின் காதல் முதன் முதலாக பாஜிராயோ மஸ்தானி திரைப்படத்தின் மூலம் தான் தொடங்கியது, மேலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் இருவரும் கமிட்டாகி நடித்து வந்தது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை உண்டாக்கி வந்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஷாருக்கானுடன் நடிகை தீபிகா நடித்து வெளியான திரைப்படம் பதான், இத்திரைப்படத்துக்கு தீபிகாவுக்கு மக்களிடையே வரவேற்பு சற்று அதிகமாகவே இருந்தது. இதனிடையே கணவன் மனைவி இருவரும் தனித்தனியே அவரவர் கமிட்டாகி இருக்கும் திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர், பொதுவாகவே இந்த ஜோடிகள் வெளியில் சென்றால் கைகளை பிடித்துக்கொள்வது வழக்கம் அதாவது தமிழில் விக்னேஷ் சிவன் நயனை போல தான், அதுபோன்று ரன்வீர் தனது கைகளை தீபிகாவிடம் நீட்ட அதனை அவர் சற்றும் கண்டு கொள்ளாமல் செல்கிறார், ரன்வீரின் கைகளை பிடிக்க மறுத்துவிடுகிறார், அதனுடன் மட்டுமல்லாது அவரின் முகத்தை பார்த்து கூட பேசாமல் சென்று விடுகிறார். இதனை தொடர்ந்து ரன்வீர் சிங் தீபிகாவை விட்டு முன்னேறி செல்கிறார், இவ்வீடியோ தற்போது கடும் வைரலாகி வரும் நிலையில், ஏற்கனவே இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் இருக்கிறார்களா என தகவல் வெளியாவது வழக்கமாகவே இருக்கும் நிலையில், இந்த வீடியோவை கண்ட பலரும் இருவரும் நிச்சயம் விவாகரத்து பெறதான் போகிறார்கள் என்றெல்லாம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இது குறித்து ரன்வீர் மற்றும் தீபிகா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.