சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு பின்னதாக மும்முரமாக உருவாகி வரும் திரைப்படமாக இது இருந்து வருகிறது. கிட்டத்தட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படமாகவும் அமைந்து வருகிறது.
காரணம் இதற்கு முன் நெல்சன் திலிப் குமார் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தாத நிலையில் ரஜினியை வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடையே வரவேற்பு பெறுமா என்பது பல்வேறு தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கேள்வியாக இருந்து வந்தது. இதனிடையே பீஸ்ட் திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து தலைவர் ரஜினிகாந்தும் தனது திரைப்படத்தை நெல்சனிடம் ஒப்படைக்கலாமா என்ற குழப்பத்தில் இருந்து வந்தார். இறுதியில் அனைவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும், என இயக்குநர் நெல்சனின் மீது நம்பிக்கை வைத்து நடிகர் ரஜினி கைக்கொடுத்த திரைப்படம் தான் இந்த ஜெயிலர்.
இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் போதிய வரவேற்பு பெறாததால் ரசிகர்கள் பலரும் ஜெயிலர் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கேற்றவாறே ஜெயிலர் திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க கிட்டத்தட்ட மிகப்பெரிய கேஸ்ட்டிங் க்ரூவுடன் திரைப்பட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை தமன்னா, சிவராஜ் , மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் இவ்வளவு பெரிய நடிகர்கள் நடிப்பதற்கு என்ன காரணமாக இருக்கும், அவ்வளவு பெரிய சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருக்குமோ என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் தோன்றி வரும் நிலையில், இதற்கு காரணமாக இருப்பது முழுக்க முழுக்க நடிகர் ரஜினியே என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு இயக்குநர் நெல்சன் கதாபாத்திர தேர்வுகளை மேற்கொள்ளும் பொழுது நடிகர் ரஜினி இத்திரைப்படம் மிகப்பெரிய சுவாரஸ்யமாக இருக்க வேண்டும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என பிற மொழிகளில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அனைவரையும் அழைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் கதாபாத்திர தேர்வுக்கு நடிகர் ரஜினி முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.