நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்துக்கான படப்பிடிப்புகள் இதுவரை 65 சதவீதம் வேலைகள் நிறைவடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இத்திரைப்படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனும் நீண்ட வருடங்கள் கழித்து ரஜினியுடன் நடித்து வருகிறார். இதனிடையே மலையாள நடிகர் மோஹன் லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்திற்கான பல்வேறு அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் மனதில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறது.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினி நடிக்க உள்ளார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு இருக்கிறார். இதன் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.