சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா , ஃபஹத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ஃபேன் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் பொதுமக்களிடையே அதிக கவனத்தை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலுமே இத்திரைப்படம் மாபெரும் வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா திரைப்படம் இந்தியில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் வசுலானது, இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்தே உடனடியாக இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மும்முரமாக உருவாகி வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா ஓர் பாடலுக்கு நடனமாடியிருப்பார், இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், இதன் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
இதனிடையே நேற்றைய தினத்தின் அறிவிப்பாக புஷ்பா படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது அதன்படி இன்று இத்திரைப்படம் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு, அதில் புஷ்பா எங்கே, ஜெயிலில் இருந்து தப்பிச்சென்றாரா என்பது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4:05 மணியளவில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாள் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி என்பதால் அதனை முன்னிட்டு புஷ்பா படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.