27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

விஷாலுக்கு பதில் ப்ரித்விராஜ் – சுந்தர்சியின் அடுத்த கட்ட முடிவு!..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்சி தற்போது படத்தை இயக்குவது மட்டுமல்லாது நடிப்பிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

தமிழ்சினிமாவின் உச்சியில் இருந்த பிரபல இயக்குநர்கள் பலரும் தற்போது நடிப்பில் தனது ஆர்வத்தை காட்டி, திரைப்படங்களில் சக நடிகர்களோடு நடித்து வருவது சற்று குழப்பமடைய தான் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் கே.எஸ் ரவிக்குமார், பார்த்திபன், சுந்தர் சி, அமீர், கௌதம் வாசுமேனன் உள்பட தற்போதைய காலக்கட்டத்தில் பிரதீப் ரங்கநாதன் வரை இயக்குநர்களில் பலரும் நடிப்பின் பக்கம் திரும்பி மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது தனிப்பட்ட பணப்பிரச்சனை காரணமாக படங்களை இயக்க முடியாமல் அதற்கான தொகையை படங்களில் நடிப்பதன் மூலம் பெற்று பல படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கி 100 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடச்செய்தார். அதன் பின்னதாக தற்போது நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி வைத்து தற்போது மீண்டும் தூசி தட்டி, படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை படக்குழு செய்து வருகிறது.

See also  தொடரும் சமூக அநீதி! - புதுக்கோட்டை நிகழ்வுக்கு காவல்துறையை கண்டித்து இயக்குனர் பா.இரஞ்சித் ட்வீட்!

இதனைத்தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சுந்தர்சி தற்போது பலப் படங்களை இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவ்வப்போது அரண்மனை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, இத்திரைப்படம் தற்போது வரை மூன்று பாகங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கும் பணிகளில் சமீப நாட்களாக ஈடுபட்டு வருகிறார் சுந்தர் சி.

இதையடுத்து சங்கமித்ரா என்னும் திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சுந்தர்சி. இத்திரைப்படம் அவரது கெரியரில் ஒரு கனவுப்படமாக அமைந்து வந்தது. இருப்பினும் சில பல காரணங்கள் அடிப்படையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்படாமலே நிறுத்தப்பட்டது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ராஜா காலத்து கதையை அடிப்படையாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் சங்கமித்ரா திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் சுந்தர் சி ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

See also  லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அடுத்த பிரபலம் - வெளியானது தகவல்...!

இத்திரைப்படத்தின் தயாரிப்பு உரிமை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இதில் ஏற்கனவே ஆர்யா , விஷால் என நடிக்க இருந்த நிலையில் தற்போது விஷால் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. மேலும் விஷாலுக்கு பதில் அனைவராலும் அறியப்பட்ட மலையாள நடிகர் ப்ரித்திவிராஜுக்கு பதில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பல படங்களில் பிஸியாக இருந்து வரும் சுந்தர் சி இத்திரைப்படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது பல பான் இண்டியா படங்கள் வெளியாகி மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் நிலையில் இயக்குநர் சுந்தர் சி இத்திரைப்படத்தை எப்படியாவது எடுத்தே தீர வேண்டும் என்ற இறுதிக்கட்ட நிலைக்கு சென்றுள்ளதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts