தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே, இவர் தமிழில் சிறந்த நடிகையாக வலம் வரவில்லையென்றாலும் , தெலுங்கு , இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகைகளில் பட்டியலில் திகழ்ந்து வருகிறார்.
இதையடுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பு பெற்றார். பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது சொந்த வீடு வாங்கியிருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பகிர்ந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, சிறுவயது முதலே எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டுமென்பது பெரிய கனவாக இருந்து வந்தது, இப்பொழுது தான் நிறைவேறியுள்ளது. மும்பையில் ஒரு புது வீடு ஒன்றை வாங்கி அதனை எனக்கேற்றவாறு திருத்தம் செய்து மாற்றியிருக்கிறேஎன். தொழில் ரீதியாகவும் மற்ற வழிகளிலும் நாம் எவ்வளவு மன உளைச்சலோடு இருந்து வந்தாலும் நாம் வீட்டிற்கு போகும் பொழுது அவையனைத்தும் பறந்து போக வேண்டுமல்லவா எனக்கூறி , அதனால் தான் எனக்கேற்றவாறு எனது வீட்டை மாற்றியுள்ளேன், வீடு எனொஅது நம்மை நம்மைப் போலவே இயல்பாக வைத்துக்கொள்ளும் இடம், நாம் சுந்தந்திரமாக இருக்கும் ஒரே இடம் , மேலும் நான் நடிகை என்பதால் எனது படுக்கை அறையில் சினிமா போன்ற பொழுதுபோக்குகளை காண்பதற்காக ப்ராஜெக்ட்டர் வைத்திருக்கிறேன், என்றார்.