தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாபெரும் காவியம் பொன்னியின் செல்வன்.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து பண்டையர் காலத்து பாரம்பரியங்கள் குறித்த கதையம்சத்தை கொண்டு திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதனை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது, மேலும் இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் நீண்ட காலத்து கனவாக இருந்து வந்தது. ஆரம்ப கட்டத்தில் எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை இதனை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வாய்ப்புகள் இறுதியில் கிட்டப்படாமலே இருந்து வந்தது. அதன் பின்னதாக இயக்குநர் மணிரத்னத்திற்கும் இத்திரைப்படத்தை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது, அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் வாய்ப்பு இறுதியில் மணிரத்னத்தின் கைகளுக்கு சென்றது, இது அவரின் கனவு திரைப்படம் என்பதால், இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார்.
மேலும் ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத்தை மையமாக வைத்து, இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக்கியுள்ளார் மணிரத்னம். இதில் எண்ணற்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் நடித்திருப்பது, பாரம்பரிய கதை என்பதால் மக்கள் மனதில் இத்திரைப்படம் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது என்று சொன்னால் கூட மிகையாகாது.
இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி , பொன்னியின் செல்வனின் முதல் பாகம் மக்களின் மாபெரும் வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது, அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை சரியாக 90 நாட்களில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காலங்கள் கடந்தாலும் பொன்னியின் செல்வன் கதைக்கு இன்னமும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்ததே, இக்கதையினை படமாக்குவதற்கான முயற்சிகளில் தமிழ்சினிமாவுக்கு பேராதரவாக இருந்தது.
மேலும் இத்திரைப்படம் தமிழ்சினிமாவுக்கு மேலும் ஓர் புகழை தேடிக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். மக்கள் மத்தியில் தமிழ் திரையுலகின் மீதான பார்வையை பொன்னியின் செல்வன் திரும்பி பார்க்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது, இத்திரைப்படம் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலகலாமாக நடைபெற்றது. அதில் திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் விழாவின் சிறப்பு விருந்தினராகவும் வந்திருந்தனர். பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தினுடைய இசை வெளியீட்டு விழாவிற்கு மக்கள் மத்தியில் இருந்த அதே வரவேற்பே இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் இருந்தது.
மேலும் நடிகர்கள் பலரும் தங்களது அனுபவங்களை சுவாரஸ்யாமாக ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்ட வேலையில், நடிகர் சரத்குமார் விழா மேடையில் பேசியது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. அதாவது பெரிய பழுவேட்டைரையர் என்னும் கதாபாத்திரத்தில் நந்தினியின் அதாவது ஐஸ்வர்யா ராயின் கணவராக இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். அவ்வப்போது நந்தினியுடனான காதல் காட்சிகள் படத்திற்கு முக்கியத்துவமானதாக இருக்கும், அதனடிப்படையில் எனக்கு கொடுத்த முதற்காட்சியே நந்தியுடனான காதல் காட்சிகளை தான், அப்போது இயக்குநர் மணிரத்னம் என்னை பார்த்து ரொமான்ஸ் செய்ய வருமா என கேட்டார். என் தனிப்பட்ட வாழ்க்கையில் இருமுறை காதலித்து திருமணம் செய்தவன் நான் என்னை பார்த்து ரொமான்ஸ் வருமா என மணிரத்னம் கேட்டது சற்று கஷ்டமாக இருந்தது என வெளிப்படையாக சில விஷயங்களை பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்தது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.