புகழ்பெற்ற எழுத்தாளார் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்னம், திரைப்படமாக இயக்கியுள்ளார்.
கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவது நீண்ட காலமாக தமிழ்சினிமாவின் மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது.இதனை சிவாஜி முதல் கமல் வரை இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் வாய்ப்புகள் நழுவி இறுதியாக இயக்குனர் மணிரத்னத்தின் கைக்கு வந்தது.
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, இரண்டு பாகமாக மக்களுக்கு சமர்பிக்க இருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை இரண்டு பாகமாக படத்தை எடுத்து முடித்துள்ளார். அதில் முதல் பாகம் மட்டும் வெளியிட்டப்பட்டது.
மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை வெளியிடும் பொழுது இயக்குனர் மணிரத்னம் இதன் இரண்டாம் பாகம் சரியாக 90 நாட்களில் வெளியிடப்படும் என அறிவித்து மக்களை பெரும் எதிர்ப்பார்ப்பில் திகைக்க வைத்தார்.
பொன்னியின் செல்வனின் முதல் பாகம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா மற்றும் விக்ரம், ஐஸ்வர்யா ராய் , ஐஸ்வர்யா லட்சுமி , ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்து நாட்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையில் பொன்னியின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வனின் முதல் பாகமே 500 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் இன்னும் என்ன செய்ய இருக்கிறதோ பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் , முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடத்தி பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இத்திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருப்பதால் அவரிடம் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு தேதி கேட்டு வருவதாகவும் , அவர் இறுதி செய்ததும் பாடல் வெளியீட்டு விழா இறுதி செய்யப்படும் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
previous post