புகழ்பெற்ற நாவலர் கல்கி எழுதிய நாவலைத் தழுவி திரைப்படமாக்கப்பட்டது தான் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்கள் கொண்ட புத்தகங்கள் ஆகும், இதனை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அதில் நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய் , ஜெயம் ரவி, கார்த்திக் மற்றும் பிரகாஷ் ராஜ் , பார்த்திபன் , சரத்குமார் உள்ளிட்ட முக்கிய பலர் நடித்திருக்கின்றனர்.
மேலும் இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இரண்டு பாகமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் பொதுமக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரேற்பைப் பெற்றது.
பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை 90 நாட்கள் கழித்து வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதன் படி தற்போது இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் முக்கிய நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் இருவரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கொடுத்த வரவேற்பை போலவே இரண்டாம் பாகத்திற்கும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை பணிகள் டெல்லியில் நடைபெற்று வருவதாக ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். தற்போது அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 28 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் தேதி வெளியாகியுள்ளது, அதாவது இம்மாதத்தின் 29 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெயிலர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது , சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.