தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பத்து தல. இத்திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
கன்னட திரையுலகின் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் ரீமெக்காக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. இத்திரைப்படத்தை ஓபிலி கிருஷ்ணா இயக்க, இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.
கன்னட திரையுலகில் வெளியான மஃப்டி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை சந்தித்ததால் தற்போது தமிழில் நடிகர் சிம்புவை வைத்து ரீமேக்கிங் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் நடிகர் சிம்பு சினிமாத்துறையை விட்டு விலகி நடிப்பின் பக்கம் தனது கவனத்தை செலுத்தாமல் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் சிம்பு மீண்டும் நடிப்பதில் ஆர்வத்தை செலுத்தி வரும் நிலையில், இவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என இரண்டு படங்களுமே 100 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடியது.
தற்போது இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்திருக்கும் பத்து தல திரைப்படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார், அதுமட்டுமல்லாது இவரின் மகனான ஏ.ஆர்.அமினும் நினைவிருக்கா என்னும் பாடல் ஒன்றை பத்து தல திரைப்படத்திற்காக பாடியிருக்கிறார்.
தற்போது இன்றைய நாளில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தின் இரண்டு பாடல், மற்றும் டீசர் என வெளியாகி மக்களிடையே அதீத வரவேற்பை பெற்று வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டு படத்தின் வெளியீட்டு தேதியை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
பத்து தல திரைப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில்,இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முக்கிய விருந்தினராக கமல் மற்றும் சூர்யா வருகைத்தர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இல்லையெனில் இருவரில் யாரெனும் ஒருவராவது நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே எதிர்பார்ர்பை அதிகப்படுத்தியிருக்கிறது.