தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பையா.
லிங்குசாமி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டின் பொழுது திரைக்கு வந்தது. இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்களிடையே தற்போது வரை வரவேற்பு பெற்று கொண்டே இருக்கிறது. பையா திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்தது இன்றளவும் ரசிகர்களால் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இத்திரைபடத்திற்கு ரசிகர்களிடையே தற்போது வரை தனி வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் பையா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிகம் எழுப்பி வரும் கேள்வியானது பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று தான். கிட்டத்தட்ட ரசிகர்களின் பல வருடத்து கனவு தற்போது நினைவாகியுள்ளது.
அதாவது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்திருந்த நிலையில், இதில் நடிகர் கார்த்திக்கு பதில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இத்திரைப்படம் குறித்து வெளியான அனைத்து அறிவிப்புகளுமே உறுதியான நிலையில், இயக்குனர் லிங்குசாமி பையா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் மே மாதத்தின் போது தொடங்க இருப்பதாகவும் கூறினார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.