அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் கனெக்ட். இத்திரைப்படத்தில் நடிகர் வினய் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கனெக்ட் திரைப்படத்தில் இடைவெளி இல்லை என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பித்தக்கது.
இத்திரைப்படத்தின் ட்ரைலர், பாடல் என வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படம் இடைவெளி இல்லாமல் வெளியாகும் என அறிவித்ததில் இருந்து இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. வருகிற 22 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் கனெக்ட் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவதாவது , பொதுவாகவே படத்தின் இடையில் விடப்படும் இடைவெளியில் தான் கேன்டீன் வியாபாரம் பெருகும். தற்போது இடைவெளி இன்றி கனெக்ட் திரைப்படத்தை வெளியிட்டால் கேன்டீன் வியாபாரம் பாதிக்கும். இதன் மூலம் வரும் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தின் அடிப்படையில் கனெக்ட் திரைப்படத்தை இடைவெளி இல்லாமல் தங்களால் திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இத்திரைப்படத்தில் அனைவருக்கும் இருந்தே எதிர்பார்ப்பு 99 நிமடங்களில் ஒரு திரைப்படத்தை பார்க்க போகிறோம் என்பது தான், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருவதால் முதலில் படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.