கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியைக் கண்ட வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கு பின், சிம்பு நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் பத்து தல.
இத்திரைப்படத்தை சூர்யா நடிப்பில் வெளிவந்து, இன்றளவும் பேசப்பட்டு வரும் சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா சிம்புவின் பத்து தல திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இதற்கு இசையமைப்பாளரும், ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
நடிகர் சிம்புவின் நீண்ட நாள் திரைப்பயணத்துக்கு பிறகு, அவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் 100 நாள் வெற்றியை எட்டி வருகிறது. மாநாடு , வெந்து தணிந்தது காடு என , இதன் வரிசையில் தற்போது பத்து தல திரைப்படத்தையும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். மேலும் பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன், நடிகர் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் போன்றோர் இணைந்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து , ப்ரோமோஷன் பணிகளை தொடங்க இருக்கிறது படக்குழு. சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருந்தது, இதனை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வந்தது. இதனிடையே இத்திரைப்படத்தின் டீசன் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று டீசர் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது மார்ச் 10 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும், இதற்கான வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து மற்றொருமொறு அப்டேட் வெளியாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இடம்பெற இருக்கும் அதே நிலையில் தனது மகனை இசையுலகத்துக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனான ஏ.ஆர்.அமீனின் இசைப்பயணத்தை சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் தொடக்கி வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகவல் தற்போது இணையத்தள பக்கங்களை ஆக்கிரமித்து வருகிறது.