ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் திருமனம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்திய அளவில் வர்த்தகத்தில் முன்னணியில் திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் தான் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானி தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். மேலும் இவர் திருமணம் செய்து கொள்ளும் ராதிகா நியூயார்க் பல்கலைகழகத்தில் படித்து வந்தவராவர்.
இவரது பெற்றோர்கள் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆவார், ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்த 29 ஆம் தேதி திருமணத்தை உறுதிபடுத்தும் வகையில் ராஜஸ்தானில் ரொக்கா விழா நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகாவுக்கும் சங்கீத் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இவர்களது நிச்சயதார்த்த விழாவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் , திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகைத்தந்தனர்.
இதில் நடிகர் சல்மான் கான், ஜான்வி கபூர் , குஷிகபூர் , கத்ரீனா கைஃப் , ஷாருக்கானின் மனைவி மற்றும் மகன் ஆர்யன் கான் , சாரா அலிகான் , அக்ஷய் குமார், சச்சின் தெண்டுல்கர் , ரன்வீர் சிங், தீபிகா படுகோன் , போனி கபூர் , போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆனந்த் மற்றும் ராதிகாவை வாழ்த்தியுள்ளனர்.
சங்கீத் நிகழ்ச்சியை தொடர்ந்து நிச்சயதார்த்த விழா கோலகலமாக நடைபெற்றது, அதில் தங்களது செல்லப்பிராணி மோதிரத்தை எடுத்து வந்து கொடுக்க அதனை மணமக்கள் இருவரும் மாற்றிக்கொண்டனர். இதையடுத்து திருமண பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.