தமிழ் சினிமாவுக்கு முதன் முதலாக யாருடா மகேஷ், திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சந்தீப் கிஷன்.
இதற்கடுத்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சந்தீப் கிஷன், மாநகரம் திரைப்படம் திரைத்துறையில் இவருக்கான ஓர் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் மைக்கேல் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதி திரையில் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை வழங்கியதால் வழக்கம் போல மைக்கேல் திரைப்படத்துக்கும் மக்களிடையே அதீத எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முக்கிய பலரும் நடித்திருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இத்திரைப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்த நிலையில் , சாம் இசையமைத்திருந்தார். இதனிடையே இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்போது இத்திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது, பொதுவாக புதிதாக திரைப்படம் திரையிடப்பட்டால், அப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக சுமார் 4 வாரங்களாவது எடுத்துக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தற்போது இத்திரைப்படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், திரையரங்குளில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் நிலையிலேயே ஓடிடி தளத்திலும் இத்திரைப்படம் தடையை மீறி வெளியாயுள்ளது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதிய படங்களை தியேட்டர்களில் வெளியான 4 வாரங்கள் கழித்தே ஓடிடி-யில் வெளியிடப்பட வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் மைக்கேல் திரைப்படத்தை மூன்று வாரங்களிலே, ஓடிடி தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கண்டனம் தெரிவித்து வருகின்றன்ர்.
இதனால் தற்போது மைக்கேல் திரைப்படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் தடை செய்துள்ளனர், இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது , மைக்கேல் திரைப்படத்தை 3 வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டதால் , மற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் இதே முடிவை எடுப்பார்களா என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.