விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குகவித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
குக்வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் புகழ், பாலா. சிவாங்கி , மணிமேகலை , குரேஷி , சுனிதா போன்றோர் இந்நிகழ்ச்சியை நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்து வருகிறது.
ஆனால் இந்த சீசனில் கூடுதலாக ஜிபி முத்து, ரவீனா, சிவா போன்றோர் இணைந்துள்ளனர். குக்வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்து வரும் மணிமேகலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமல்லாது, தொகுப்பாளராகவும் , யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறித்து மணிமேகலை தெரிவித்திருப்பதாவது, கடினமான முடிவு தான், ஆனால் எடுத்தாக வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்று குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் எனது கடைசி எபிசோடு , நானே வருவேன் கெட்டப்பில் , நான் வர மாட்டேன் என தெரிவித்து இருக்கிறேன் என குறிப்பிட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்று வருகிறது. இதனை அறிந்த பலரும் மணிமேகலை வெளியேறுவதை குறித்து வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு மிகவும் எதிர்பாராத ஒன்று. கடினமான சூல்நிலையிலும் உங்கள் அன்பு எனக்கு துணையாக இருந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் அதே அன்பையே எதிர்பார்த்து காத்திருப்பேன் என குறிப்பிட்டிருப்பது வைரலாகி வருகிறது.