தோனி எண்டர்டெயிண்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார் கிரிக்கெட் வீரர் தோனி.
இத்தயாரிப்பு நிறுவனம் நேரடி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருந்ததும் அதன்படி உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு LGM என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் மற்றும் , நாயகியாக லவ்டுடே திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்ற இவனா நடித்து வருகிறார். மேலும் இதில் நடிகை நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் பட்பிடிப்பிற்கான பூஜை வேலைகள் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று, படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் எல்.ஜி.எம் திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முதற்கட்டமாக இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணிக்கு எல்.ஜி.எம் திரைப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் நாயகனாக ஹரிஷ் கல்யாண் இது குறித்த தகவலை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து விசில் போட ரெடியா என பதிவிட்டிருக்கிறார். இதில் சுவாரஸ்யமாக பார்க்கப்படும் விஷயம் என்றால் தோனியின் எண்ணான 7 அடிப்படையாக கொண்டு 7 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.