லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட முறையில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.
வாரிசு திரைப்படத்துக்கு பின்னதாக நடிகர் விஜய் மும்முரமாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இவ்விருவரின் ஜோடி கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருப்பதால் இதற்காகவே ரசிகர்கள் மத்தியில் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை சந்தித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார், மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். மீண்டும் இவர்களின் கூட்டணி ஒன்றாக லியோவில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது, அதில் அக்ஷன் கிங் அர்ஜூன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின், மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் மற்றும் சஞ்சய் தத் போன்ற முக்கிய பலரும் நடித்து வருவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இம்மாதத்தின் இறுதிக்குள் முதற்கட்ட படப்பிடிப்புகளை லோகேஷ் நிறைவு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்காக லோகேஷ் கனகராஜ் கடும் போராட்டமாக படப்பிடிப்புகளை திட்டமிட்ட தேதிக்குள் முடித்து, படத்தை திட்டமிட்டப்படி வெளியிட வேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக மிஷ்கின் காட்சிகள் நிறைவடைந்து சென்னை திரும்பினார், இதற்கிடையில் த்ரிஷாவின் காட்சிகளும் நிறைவடைந்தன, அதன் பின் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காட்சிகளும் நிறைவடைந்து அவரும் திரும்பினார் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் என்பது மட்டும் உறுதியான நிலையில் இருந்தது.
இது போன்று ஒவ்வொருவராக அவர்களது காட்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகையிலே தெரிந்திருக்கும், லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என, மேலும் காஷ்மீரில் லியோ படக்குழு திட்டமிட்டப் படி படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளது. அதில் நடிகர் விஜய்யும் தனது காட்சிகளை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். அதன்படி விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்பொழுது தொடங்க உள்ளது என லோகேஷ் கனகராஜை டேக் செய்து கேள்வி எழுப்பி வருவது இணையத்தளத்தில் கவனத்தை பெற்று வருகிறது.