லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் பல முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் மற்றும் மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
இதற்காக 150 பேர் கொண்ட குழுவுடன் படக்குழு தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். இதனை தொடர்ந்து காஷ்மீரில் பல இக்கட்டான சூழ்நிலைக்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வந்தது. மேலும் திட்டமிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு தளத்தில் தனது முழுகவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதில் முதற்கட்டமாக திரிஷா மற்றும் விஜய்யின் படப்பிடிப்புகள் பகுதி காட்சிகளாக எடுக்கப்பட்டு அவர்கள் சென்னை காஷ்மீர் என சற்று இடைவெளி எடுக்கத்தொடங்கினர். இதன் பின்னதாக மிஷ்கினின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அவரும் சென்னை திரும்பினார்., அதற்கடுத்து பாலிவுட் நடிகர் சுஞ்சய் தத்தின் காட்சிகளுக்காக அவரை படக்குழு வீடியோ வெளியிட்டு வரவேற்த்து இருந்தது. மேலும் இவரின் காட்சிகளும் நிறைவடைந்த நிலையில் , அடுத்த கட்ட படப்பிடிப்பில் சென்னையில் சந்திப்பதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரியப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே லியோ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் இம்மாதத்தின் இறுத்திக்குள் நிறைவடைய இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது காஷ்மீரில் தங்களது முதற்கட்ட படப்பிடிப்பை லியோ படக்குழு நிறைவு செய்த நிலையில், தற்போது படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் எப்படியெல்லாம் கடும் குளிருக்கு மத்தியில் எடுக்கப்பட்டது என்பதையும், படக்குழு எப்படிப்பட்ட இன்னல்களை சந்தித்தது என்பதனையும், லியோ படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்த அனுபவம் குறித்து அனைவரும் பகிரும் பல சுவாரஸ்ய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது. தற்போது இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.