இயக்குனர் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த முதல் திரைப்படம் தி லெஜண்ட். இத்திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
சரவணன் லெஜண்ட் கதாநாயகனாக நடித்து அவரே தயாரித்தும் இருந்தார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் தமிழ் , இந்தி , மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியானது. சுமார் 2500 திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான சரவணன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ஓடிடி வெளியீடு குறித்து ஓர் பதிவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் தி லெஜன்ட் திரைப்படம் அனைவரும் பார்த்து மகிழும் வரையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது ஓடிடி அறிவிப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.