தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு தனது வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே நடிகர் ஜெயம் ரவியோடு இறைவன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார், மேலும் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானோடு நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் கதாநாயகிகளின் பட்டியலில் நடிகை நயனுக்கு எப்பொழுதுமே தனி இடம் வகுக்கப்பட்டு வருகிறது. தற்போது சினிமா வட்டாரத்தில் நயனுக்கு இருக்கும் வரவேற்புக்கு தனியாக படமெடுத்தாலும் மக்களிடையே வரவேற்பு பெறுகிறது. இதுபோன்று சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட். இத்திரைப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையம்சத்தை கொண்டது, 90 நிமிட படங்களாக எடுக்கப்பட்ட கனெக்ட் திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் நயன்தாராவை போன்று தனியாக படமெடுக்கும் நடிகைகளும் உள்ளனர். இருப்பினும் அவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இருப்பதில்லை. இந்நிலையில் சென்னையில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அவ்வப்போது கல்லூரி மாணவர்களுக்கு தனது அனுபவங்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
அதில் கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்த தருணம், இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் தான் உங்கள் எதிர்காலத்தை தீர்மாணிக்கும், இதுபோன்ற சமயங்களில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள் என்பதும் , யாருடன் பழகுகிறீர்கள் என்பதும் மிகவும் அவசியமானது, நீங்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து நல்லவர்களை சேர்த்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் , கெட்டவர்களோடு சேர்ந்து விட்டால் உங்கள் வாழ்க்கை திசை மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வெளியேறும் பொழுது சிறந்த ஒரு திறமையான நபராக இருப்பது மிகவும் முக்கியம்.
அதேபோன்று வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும், மற்றவர்களிடம் பணிவோடு நடந்து கொள்ளும் போது நமது வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் உங்கள் பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்,தினமும் அவர்களுக்காக ஒரு பத்து நிமிடமாவது செலவழிக்க வேண்டும், அதன் மூலம் உங்கள் பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கைக்கு ஆசிர்வதமாக மாறும் என கூறியுள்ளார்.