நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் கிருத்திகா உதயநிதி.
இதன் பின்னதாக சிறிய இடைவெளிக்கு பின்னதாக நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின் தற்போது சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸையும் இயக்கி இருந்தார்.
பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில் , நடிகர் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் , கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்தனர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதையடுத்து தற்போது இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருவதாக உதயநிதி சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பல வேலைகளில் பிஸியாக இருக்கும் கிருத்திகா திடீரென ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கிருத்திகா மற்றும் உதயநிதியின் மகனான இன்பநிதி இடம்பெற்றிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது கிருத்திகாவின் ட்விட்டர் பதிவு, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் காதலிக்கவோ அதனை வெளிப்படுத்தவோ அஞ்சக் கூடாது, இயற்கையின் முழு மகிமையையும் புரிந்துகொள்ள காதலும் ஒரு வழி என குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.