கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது தொடர்ந்து இதனை தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி தானே இயக்கி தானே நடித்திருந்தார். மேலும் ரசிகர்களை இத்திரைப்படம் மிகவும் கவர்ந்து வந்தது.அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தின் வராக ரூபம் பாடல் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து வந்தது. ஆரம்ப கட்டத்தில் இப்பாடலுக்காக இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் உண்டாகி வந்ததும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திரைப்படத்தின் வசூல் சாதனை இதுவரையில் 400 கோடிகளை கடந்து வருகிறது. இத்திரைப்படம் அனைத்து மொழி மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை சந்தித்து இத்திரைப்படத்துக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது காந்தாரா திரைப்படத்தின் 2 பாகம் எடுப்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் , அதில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காந்தாரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தற்போது வெளிநாடுகளுக்கும் செல்லவிருக்கிறது. அதாவது காந்தாரா திரைப்படத்தின் இந்திய வெற்றியை தொடர்ந்து தற்போது இத்தாலி மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளிலும் இத்திரைப்படத்தை டப் செய்து வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில், காந்தாரா திரைப்படத்திற்கு வெளிநாடு ரசிகர்களிடமிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால் காந்தாரா திரைப்படம் இப்பொழுது வெளிநாடு திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ளது. மேலும் காந்தாரா திரைப்படம் அடுத்தடுத்து இது போன்ற பல வெற்றிகளை சந்தித்து வருவது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ரிஷப் ஷெட்டி நேகிழ்ச்சியோடு பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.