பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன் , 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் ,குறைந்த பங்களிப்புகளின் கீழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்.
அதனடிப்படையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.
இதனிடையே இந்நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாகவே கமல் பங்குபெறும் எபிசோடுகளில் கமல் சிறுது கோபத்துடனே போட்டியாளார்களிடம் நடந்து கொள்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நடிகர் கமல் அசீமிடம் கடும் கோபம் கொள்கிறார்.
உதாரணம் எடுத்து சொல்வதெல்லாம் எப்படி கட்டப் பஞ்சாயத்து ஆகும் , நான் அதைக் கண்டிக்கிறேன் இதற்கு மேல் உங்களிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை , பொறுமையும் இல்லை என்றார். இதனை தொடர்ந்து அவமரியாதை செய்தால் அதுபோன்ற அவமரியாதை உங்களுக்கு வராதா என்பதை பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை , இதனால் மற்றவங்க அவமானப்படுறாங்க நீங்க அத தட்டி விட்டுட்டு போய்டுறீங்க என கடும் கோபத்துடன் கூறுகிறார். இதற்கு பதிலளிக்க முடியாமல் அசீம் நிற்பது போன்ற ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
previous post