இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 65 சதவீத பட வேலைகள் முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருவதாக சொலல்ப்படுகிறது. அதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கிறார். ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மலையாள நடிகர் மோஹன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதனடிப்படையில் வெளியான அப்டேட் ஒன்றில் மலையாள நடிகர் மோஹன்லால் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. மேலும் ஜெயிலர் படப்பிற்காக நேற்று முந்தினம் நடிகர் ரஜினி சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் மோஹன்லால் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு உறுதி செய்தது. தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார் மோஹன்லால் அதில் நடிகர் கமலோடு உன்னைப்போல் ஒருவன் , விஜய்யுடன் ஜில்லா மற்றும் சூர்யாவுடன் காப்பான் திரைப்படங்களில் நடித்திருந்திருந்தார். இத்திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
previous post