தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவின் மாநாடு திரைப்படத்துக்கு பிறகு கஸ்டடி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதான்யாவும், இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் கடந்த ஆண்டு இவர் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் சிம்புவுக்கு மட்டும் சினிமாவில் கம்பேக்காக இல்லாமல், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு இயக்குநராக மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இத்திரைப்படத்தில் சிம்புவுடன், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் எஸ்.ஜே சூர்யா என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தது மக்களை மிகவும் கவர்ந்திருந்தது, இத்திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லுப் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால் மக்களிடையே அதீத வரவேற்பு இருந்தது, அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிநடைப் போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிம்பு அதற்கடுத்து வெந்து தணிந்தது காடு , பத்து தல என பிஸியாக இருக்க, இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து கஸ்டடி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் சுவாரஸ்யமாக அமைவது இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து முதன் முறையாக இசைக்கும் திரைப்படமாக கஸ்டடி அமைந்துள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் , படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே முதன் முறையாக தெலுங்கில் திரைப்படம் எடுத்த வெங்கட்பிரபுவுக்கு, இசைஞானி இளையராஜாவும் தெலுங்கிலையே தனது வாழ்த்துக்களை அள்ளி வீசியிருக்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் இளையராஜா, அதில் என்னுடைய உதவியோ, என் தம்பியின் உதவியோ இல்லாமல் நீயாகவே முயற்சி செய்து இத்திரையுலகில் ஓர் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறாய். உன்னுடைய புதிய திரைப்படத்தின் பூஜை விழாக்களில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை, இருந்தாலும் என்னின் ஆசிர்வாதம் உமக்கு எப்பொழுதும் உனடு, நீ இயக்கும் திரைப்படத்தில் நான் இசையமைப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து வெங்கட் பிரபுவை தெலுங்கிலையே வாழ்த்தி பதிவிட்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் பதிவு இணையத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.