இந்தி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். இதில் தமிழ் ரசிகர்களும் ஹிருத்திக் ரோஷனின் திரைப்படங்களை விரும்பி பார்ப்பது உண்டு.
இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டின் பொழுது சினிமாத்துறையில் பேஷன் டிசைனராக இருந்த சுஷானே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்து வந்த நிலையில் , 14 ஆண்டுகள் கழித்து சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாக 2014 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன் பின் தனது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த ஹிருத்தி ரோஷன் சமீப காலமாக இந்தி நடிகை சபா ஆஷாத்துடன் காதலில் இருந்து வருகிறார். இதனிடையே இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும். இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹிருத்திக் ரோஷனின் குழந்தைகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.