26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CinemaCinema News

ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

நடிகை ஹன்சிகா முதன் முதலில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இந்தி கன்னடத்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை ஹன்சிகா , இதற்கு முன் நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து வந்தார். இதனிடையே இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தங்களது காதலை முறித்து கொண்டனர். அதன் பின் ஹன்சிகா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இருப்பினும் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. ஆனால் தற்போது ஹன்சிகா பிஸியாக பல படங்களில் நடித்து வருவதாகவும், கதாநாயகிகளிடையே ஹன்சிகாவுக்கு தான் படங்கள் வாய்ப்பு அதிகம் கையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே நடிகை ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகை ஹன்சிகாவின் தந்தை பிரதீப் மோத்வானி பெரிய தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை ஹன்சிகாவின் தாயாரும் ஒரு தோல்நோய் நிபுணராக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து ஹன்சிகாவும் தொழிலதிபரை தற்போது திருமணம் செய்யவுள்ளார்.

See also  Actress Hansika Motwani Latest Photos, Stills, Photoshoots, Gallery, Stills, Wallpapers

நடிகை ஹன்சிகா சமீபத்தில் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலிப்பதாக தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பாரிஸில் அமைந்திருக்கும் ஈஃபில் டவர் முன் ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்பதை தெரிவித்தார்.

மேலும் இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அரண்மையில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ஹன்சிகா திருமணத்திற்காக தயாராகி வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தளங்களில் அடுத்தடுத்து வெளியானது. தற்போது திருமண கொண்டாட்டங்கள் கலைக்கட்ட மெஹந்தி விழா நடைபெற்றுள்ளது. இதில் நடிகை ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் கைகளில் மெஹந்தி போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதனுடன் சோஹைல் மற்றும் ஹன்சிகா இருவரும் மெஹந்தி விழாவில் நடனமாடுவது போன்ற வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

See also  Actress Hansika Motwani Latest Photos, Stills, Photoshoots, Gallery, Stills, Wallpapers

Related posts