நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்தியும், நடிகை மஞ்சிமா மோகனும் ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து தற்போது ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் இவர்கள் இருவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தனர். இதுவெ இவர்களின் காதலை உறுதி செய்தது. இருப்பினும் கவுதம் மற்றும் மஞ்சிமா இணைந்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு , தங்களது காதலை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் , இருவரும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிவித்தனர். இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் திருமணம் குறித்து இரு வீட்டாரின் கருத்து என்ற கேள்வியை முன் வைத்தார். இதற்கு இருவரும் ஒன்றாக இணைந்த படி எங்கள் திருமணம் குறித்து ரெண்டு வீட்டுலையும் ரொம்ப சந்தோஷமாக இருக்காங்க – எனக்கூறி, எங்கள் திருமணத்துக்கு உங்கள் அன்பும் ஆசியும் வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்கள், காதல் கடந்து இன்று திருமணம் வரை சென்றிருப்பது குறித்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மஞ்சிமா மோகன் மற்றும் கவுதம் கார்த்திக் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் , இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.