27.7 C
Tamil Nadu
28 May, 2023
CinemaCinema News

மழலையின் தருணங்களுக்காக ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம் – அட்லீ மற்றும் பிரியாவின் பதிவு..!

atlee-priya

தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வரும் அட்லீ, பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர். ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தின் மூலம் தான் அட்லீ இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லீ எடுத்த படமான தெறி, மெர்சல் , பிகில் என அனைத்தும் பிளாக்பஸ்டர் இடங்களை தட்டிச்சென்றது. ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் அட்லீ , தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

அட்லீ தனது கவனத்தை படங்களில் இயக்குவதில் மட்டுமல்லாது தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். அதனடிப்படையில் தனது மனைவி பிரியாஅட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வந்தார். அட்லீயும், பிரியாவும் காதலித்து கடந்த 2014 ஆம் வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா மற்றும் அட்லீ இணைந்து தங்கள் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அதில் எங்கள் குடும்பத்தில் ஒரு நபரை இணைக்க இருக்கிறோம், அதாவது நாங்கள் இருவரும் பெற்றோர்கள் ஆகப்போகிறோம் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி, எங்கள் இருவருக்கும் நீங்கள் கொடுத்து வந்த அன்பையும், ஆசிர்வாதத்தையும் எங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள் என பதிவிட்டு மழலையின் சப்தத்திற்காக காத்து கிடப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

See also  நடிகர் விக்ரமை தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா

Related posts