தமிழ் சினிமாவின் காமேடி நடிகர்களில் அனைவருக்குமே பிடித்த ஒருவர் என்றால் அது வைகைப்புயல் வடிவேல். இவரது நகைச்சுவைக்கு இக்காலத்திலும் தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இவ்வளவு ஏன் சமூக வலைத்தளப்பக்கங்களில் மீம் டெம்பிளேட்டுகளுக்கு வடிவேலு தான் தலைவர் என்றே சொல்லலாம்.
இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலுமே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்துக்கு பின் அப்படத்தின் இயக்குநருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு சினிமாத்துறையை விட்டு விலகி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நடிக்கவும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே நீண்ட கால இடைவெளிக்கு பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் நடிப்பின் பக்கம் தன் கவனத்தை செலுத்தத் தொடங்கினார் நடிகர் வடிவேலு. இவர் நடிக்காத காலத்திலும் இவரது நகைச்சுவை மூலம் சமூக வலைத்தளங்களில் மீம்களால வலம் வந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுக் கொண்டே தான் வந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இவர் திரைத்துறைப் பக்கம் திரும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்து, இவர் நடிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது. நீண்ட நாள் கழித்து வடிவேலுவை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வந்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இதற்கடுத்து தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்திலும் வடிவேலு நடித்து முடித்திருக்கிறார்.
இதற்கிடையே நீண்ட காலமாக சந்திரமுகி 2 திரைப்படத்தை எடுக்க இயக்குநர் வாசு திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரமுகி பாகம் ஒன்றிலே நடிகர் வடிவேலு கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்த நிலையில், அதே கதாபாத்திரம் சந்திரமுகி பாகம் 2லும் தொடர்வதா தகவல்கள் வெளியான நிலையில், இதிலும் நடிகர் வடிவேலுவே நடித்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் வடிவேலுவுக்கும், இயக்குநர் வாசுவுக்கும் பட்பிடிப்பு தளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.இதில் இயக்குநர் வாசு வடிவேலுவிடம் இஷ்டம் இருந்தால் நடியுங்கள் இல்லையெனில் படப்பிடிப்பிலிருந்து கிளம்லாம் என்றது போல கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகவலை வடிவேல் மற்றும் வாசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.