27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

நிச்சயம் 6 வது திரைப்படத்திலிருந்து பின்வாங்க மாட்டேன் – மனந்திறந்த விக்னேஷ் சிவன்!..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் விக்னேஷ் சிவன், கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதில் நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா என இருவரும் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் இத்திரைப்படம் இரு வேறுபட்ட காதல் கதையினை மையமாக வைத்து எடுக்கப்பட்டது, பொதுமக்களிடையே இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவனும் நயனும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் இவர்களின் திருமணம் பிரம்மாண்ட முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நயனும் , விக்கியும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளையும் பெற்றனர். இதற்கிடைடே வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டதால் இது குறித்து பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என பெயரிடப்பட்டது. ஆரம்பகாலக்கட்டத்தில் விக்னேஷ் சிவன் தான் இத்திரைப்படத்தின் இயக்குநர் என ஒப்பந்தமாகியிருந்த நிலையில், சமீபத்தில் திடீரென படக்குழு அவரை படத்திலிருந்து நீக்கியது. இதற்கு லைகா நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட காரணமாவது, இயக்குநர் விக்னேஷ் சிவனின் கதையில் அவ்வளவு திருப்தி இல்லை, நடிகர் அஜித்துக்கு இவை சரியான கதையாக இருக்காதோ என நீக்கிவிட்டதாக தெரிவித்திருந்தது.

See also  லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அடுத்த பிரபலம் - வெளியானது தகவல்...!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் இத்திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. இதனை தொடர்ந்து நடிகை நயன் தனது கணவருக்காக லைகா நிறுவனத்துடன் பேசியும் அவருக்கு வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டது, நிராகரிக்கப்பட்டதாகவே இருந்து வந்தது. இதனிடையே விக்னேஷ் சிவனின் ஆசைகளில் ஒன்றாக இருந்த ஏகே 62 திரைப்படத்தின் அறிவிப்புகளை தனது சமூக வலைத்தளப்பக்கத்திலிருந்தும் அதிரடியாக நீக்கியிருந்தார் விக்னேஷ் சிவன். இவர் சோர்ந்து போக , நடிகர் விஜய் சேதுபதி தாமாக முன்வந்து இத்திரைக்கதையில் நானே நடிக்கிறேன் என வாக்களித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விலகியதற்கான வேதனையை தனக்கேற்ற பாணியில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

அதில் தன் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு எனது நன்றிகள், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலுமே ஓர் நன்மை இருக்கிறது, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் பாராட்டு மற்றும் வெற்றியைவிட அதிகமாக நமக்கு கற்றுக்கொடுக்கும், மேலும் எனது 6 வது திரைப்படத்தில் இருந்து நிச்சயம் பின்வாங்கமாட்டேன் , இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு துணையாக நின்ற கடவுளுக்கும் மக்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவிக்கிறேன், என பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்று வருகிறது.

See also  வெங்கட் பிரபுவை வாழ்த்திய இசைஞானி இளையராஜா!..

Related posts