தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் வெற்றிமாறன். இவர் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு தனிபிரியம் எப்பொழுதும் இருக்கும். குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவரும் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும்.
தனுஷ் வெற்றிமாறன் சிறந்த காம்போ என்பது சினிமா வட்டாரங்களில் பலரும் அறிந்த ஒன்றே. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதற்கடுத்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதனிடையில் தற்போது குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் , ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதில் இதயம் என்பது எப்பொழுதும் பிறப்பதற்கு முன்னதாகவே துடிக்க தொடங்கி விடுகிறது. உடற்பயிற்சிகளை செய்து வருவது மட்டுமே பிட்னஸ் கிடையாது. வாழ்க்கை நடைமுறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வருதல் வேண்டும். நான் கல்லூரி படித்து வந்த காலத்தில் ஒரு நாளைக்கு நான் 70 சிகரெட் துண்டுகள் வரை பிடிப்பேன், அதிலிருந்து இயக்குனராக உருவான நாள் முதல் ஒரு நாளைக்கு 150 சிகரெட் துண்டுகள் வரை பிடிக்கிறேன். ஆனால் இது தவறு என்பது என் மருத்துவர்கள் கூறிய அறிவுரையின் படி தவிர்த்து விட்டேன்.
இதனை தொடர்ந்து தற்போது நான் எடுக்கும் படங்கள் அனைத்திலும் புகைப்பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் முடிந்த அளாவு குறைத்துள்ளேன் , மேலும் தவிர்ப்பேன் என்றுள்ளார்.