தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் திரைப்படம் கஸ்டடி.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் நாகசைதான்யா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இவர் கடைசியாக அஷோக் செல்வனை வைத்து தமிழில் இயக்கிய மன்மதலீலை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது கஸ்டடி படத்தை மும்முரமாக இயக்கி முடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு தான் முதன்முறையாக இளையராஜாவும் , யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இதில் நடிகர் சரத்குமார் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நாள் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் முழுவதுமாக எடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் ஒன்றை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கஸ்டடி திரைப்படம் மே மாதம் 12 ம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.
தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் , நாகசைதான்யாவின் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அன்பார்ந்த நாகசைதான்யா ரசிகர்களே படத்தின் வேலைகள் நிறைவடைந்தது, படத்தை வெளியிடுவது மட்டுமே அடுத்த வேலை, அதில் முதற்கட்டமாக டீஸர் வெளியிடுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என பதிவிட்டு இருக்கிறார். தற்போது வெங்கட் பிரபுவின் டிவிட்டர் பதிவு இணையத்தளங்களில் கவனத்தை பெற்று வருகிறது.