தமிழ் சினிமாவுக்கு முதன் முதலில் துரோகி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுதா கொங்கரா. இதையடுத்து மாதவன் மற்றும் ரித்திகா சிங் – ஐ வைத்து இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கி அனைவரின் மனதையும் வென்றார்.
மேலும் இவர் இறுதி சுற்று திரைப்படத்துக்கு பின்னதாக சூர்யா மற்றும் அபர்ணாவை வைத்து இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் பல தேசிய விருதுகளையும் பெற்றது. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகியும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் சுதா கொங்கராவுக்கும் தங்கள் கெரியருக்கு ஒரு ஜாக்பாட் ஆக அமைந்தது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இத்திரைப்படம் பல விருதுகளை வென்ற நிலையில் இந்தியிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் நாயகனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இந்தியில் ரீமேக் ஆகும் சூரரைப்போற்று திரைப்படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதனிடையே தற்போது சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று கடும் வைரலாகி வருகிறது.
அதில் இவருக்கு படபிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது , தனது கைகளில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, சிறந்த வலி, சிறந்த எரிச்சல், மேலும் இது நான் விரும்பிய இடைவெளி இல்லை என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருக்கும் புகைப்படமும் அவரது ட்வீட் – ம் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. இதனை கண்ட திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சுதா கொங்கராவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.