தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன் சமீபத்தில் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்பொழுது எல்லாம் படத்தை இயக்குவதில் மட்டுமல்லாது நடிப்பதிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதையடுத்து செல்வராகவன் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதனிடையே செல்வராகவன் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கும் புதிய படத்திற்காக திரைக்கதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் இவர் இருக்கும் புகைப்படமும் , இதுதான் மண்டைய பிச்சிகிட்டு எழுதுறது என்ற வாக்கியத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் ஸ்கிரிப்ட் எழுதி முடித்துவிட்டு அப்டேட் கொடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.