புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் கிராமத்தில் அமைந்திருக்கும் வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் வசித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுயில் இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மாவட்ட கலெக்ட்டரான கவிதாராமு கிராமத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது பட்டியலின மக்களை அங்கிருக்கும் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழத்தொடங்கியது. இந்நிலையில் அவர்களை எதிர்த்து மாவட்ட கலெக்டர் கவிதா அனைவரையும் கோவிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து டீக்கடை சமச்சாரம் மற்றும் பட்டியலின மக்களை எதிர்த்து ஒரு பெண் சாமி ஆடியது போன்ற நிகழ்வுகள் நடந்து முடிந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சாதிய பாகுபாடு காட்டியதன் அடிப்படையில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்திற்கு தைரியமாக முன்வந்து குரல் கொடுத்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் கவிதாவை அனைத்து துறைகளில் உள்ளோர்களும் பாரட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது ஜாதி குறித்து மற்றும் சமூகம் சார்ந்த தீண்டாமை ஒழிப்பது குறித்து மக்களுக்கு திரைப்படமாக கொண்டு சேர்க்கும் இயக்குனர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும் , பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளையும் இது வரை எடுக்காத சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு வன்மையான் கண்டனங்கள் மற்றும் தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள் என தெரிவித்து இவர் பதிவிட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.