தமிழ்சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் மாநகரம் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.
அப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படமும் , விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படமும் எடுத்து மக்களிடையே தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். இதனை தொடர்ந்து இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடையே அமோக வரவேற்பு பெற்று வந்தால் வளரும் இளம் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் முக்கிய இடத்தை பிடித்து வந்தார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி , மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் வெற்றியை சந்தித்ததால், அடுத்து உலக நாயகனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். மேலும் சினிமா மீதான லோகேஷ்- ன் ஆர்வம் முதன் முதலில் நடிகர் கம்ஹாசனை பார்த்து வந்ததாகவும், மிகப்பெரிய ரசிகர் எனவும் குறிப்பிட்டு இருப்பார்.
எனவே உலக நாயகனை வைத்து ஃபேன் பாயாக ஒரு படத்தை இயக்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து விக்ரம் திரைப்படம் மக்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. பல கோடி கணக்கில் வசூலை அள்ளிக் குவித்தது. அவர் கூறியதை போலவே தரமாக அமைந்தது விக்ரம் திரைப்படம். நீண்ட கால திரைப்பயணத்தில் விக்ரம் திரைப்படம் அமோக வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தது.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னதாக மீண்டும் லோகேஷ் விஜய்யுடன் இணையப்போவதாக தகவல் வெளியானது. அதற்கான முதற்கட்ட வேலைகளில் ஈடுபட்ட லோகேஷ் தனது சமூக வலைத்தளங்களான சோஷியல் மீடியாக்களில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டார்,இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அடுத்த திரைப்படத்திற்கு கதை எழுத வேண்டும், கதை எழுதுவதில் முழு கவனம் தேவைப்படும் எனவே சோஷியல் மீடியாக்களுக்கு சிறிது ரெஸ்ட் கொடுக்கப்போவதாக தெரிவித்தார்.
விஜய் நடிப்பில் வாரிசு வெளியானதற்கு பிறகு கிட்டத்தட்ட லோகேஷ் தான் விஜய்யின் அடுத்த பட இயக்குனர் என்பது உறுதியாகி தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்து வந்தது. தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தளபதி 67 படத்தின் கதை எழுதுவதற்காக சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகி இருந்த லோகேஷ் கனகராஜ் ஆறு மாதத்திற்கு பிறகு படத்தின் அறிவிப்போடு சோஷியல் மீடியாக்களுக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
அதில் மீண்டும் ஒரு முறை விஜய் அண்ணனவுடன் என பதிவிட்டு நடிகர் விஜய்யோடு இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். நேற்று தளபதி 67 குறித்த முக்கிய அறிவிப்பாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தளபதி 67 திரைப்படத்தை தயாரிப்பதாகவும் , லோகேஷ் திரைப்படத்தின் இயக்குனர் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. இதுவே மக்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து ஆக்டிவ் ஆகி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.