அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் , விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குளில் இன்று வெளியானது. இத்திரைப்படங்களை ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகர்களும் படத்தின் முதற்காட்சிகளுக்கு சென்று கண்டுகளித்துள்ளனர்.
இதில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை த்ரிஷா , கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ரசிகர்களோடு திரையரங்கில் கண்டு களித்தனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது, ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தேன் என்றார்.
வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்போதைய பெயராக தளபதி 67 என வைத்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தளபதி 67 படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. எனவே இது குறித்து வாரிசு படத்தை பார்க்க வந்த லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 குறித்த அப்டேட்டை கேட்டுள்ளனர், இதற்கு பதிலளித்த அவர் , இன்று தான் வாரிசு வெளியாகி உள்ளது, இன்னும் சில நாட்களில் அப்டேட் வரும் என தெரிவித்து தேதியை விரைவில் வெளியிடுவோம் எனவும் கூறினார். எனவே இன்னும் சில நாட்களில் தளபதி 67 குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.