27.5 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

மீண்டும் பாலிவுட் செல்லும் கௌதம் வாசுதேவ் மேனன்!..

கௌதம் வாசுதேவ் மேனன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காதலை வெளிப்படுத்தி வரும் விதம் தான்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் திரைப்படங்களில் அதிகம் முக்கியத்துவம் காதலுக்கே இருக்கும், இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாசமான காதல் கதையையே அடிப்படையாக கொண்டிருக்கும்.

வழக்கம் போல் அனைத்து படத்திலும் இருக்கும் காதல் கதைகளை விட இவர் எழுதும் திரைக்கதைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாது இவரின் திரைப்படங்களால் இன்றளவும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இதன் இடையில் சில பல பிரச்சனைகள் காரணமாக திரைப்படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்டே வந்தார்.

இதனிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது திறமையை நடிப்பின் மூலமும் வெளிப்படுத்தி வந்தார். திரைப்படங்கள் இயக்குவது குறைந்து வந்த நிலையிலும் திரைப்படங்களில் ஓர் நடிகராக வலம் வந்து மக்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறார்.

தற்போது லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், இதற்கு முன் பாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டின் பொழுது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை இந்தியில் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் அப்படத்துக்கு பொதுமக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் மீண்டும் கோலிவுட் பக்கமே திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் பாலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வடநாட்டு காவலர் அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதாகவும் இதற்கான திரைக்கதை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இவரின் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை மீண்டும் தூசி தட்டி படத்தின் வேலைகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது இவரது இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் இவர் தமிழில் மீதமுள்ள படங்களை முடித்து கொடுத்ததற்கு பின்னதாக பாலிவுட்டிற்கு செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

See also  இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணமா? - வெளியானது அதிகாரப்பூர்வமான தகவல்!

Related posts