26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

சூர்யாவாக மாறிய அருண்விஜய் – தொடங்கியது வணங்கான் திரைப்படம்!…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் தற்போது வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரம்ப கட்டத்தில் சூர்யா தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் தத்தளித்து வந்தனர். ஏனெனில் தமிழ் சினிமாவில் சூர்யா,பாலா கூட்டணி என்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதனிடையில் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இக்கூட்டணி வணங்கான் திரைப்படத்தில் இணைந்தது ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து வணங்கான் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா எடுத்தப்புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வணங்கான் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே சூர்யாவின் அடுத்த திரைப்படம் வெற்றிமாறனுடன் என அறிவிப்பு வெளியானது, இத்திரைப்படத்திற்கு வாடிவாசல் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. வாடிவாசல் திரைப்படத்தின் கதையம்சம் முழுவதும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

See also  நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு!..

இதனிடையே வணங்கான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு எடுக்கப்பட்டு வந்த நிலையிலும், பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே ஏற்பட்ட சில பல கருத்துவேறுபாடுகள் காரணமாக இத்திரைப்படத்தை விட்டு சூர்யா விலகினார். இச்செய்தி சூர்யாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து தற்போது சூர்யா அவரது 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை திரைப்படம் எடுத்து வந்த நிலையில், அத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் விடுதலை படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வாடிவாசல் திரைப்படத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இதனிடையே வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து இயக்குநர் பாலா நடிகர் அருண் விஜய்யை திரைப்படத்தின் கதாநாயகனாக தேர்வு செய்து படப்பிடிப்புகளை தொடங்கி வருகிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே சூர்யாவுக்கு வணங்கான் திரைப்படத்தின் கெட்டப்புகள் போடப்பட்ட நிலையில், அதே கெட்டப்புகளை நடிகர் அருண்விஜய்க்கு போடப்பட்டு வருவதாகவும் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வருகிறது.

See also  வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்!!

Related posts