விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படமும் , அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜுவும் , துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூரும் தயாரித்திருக்கின்றனர். மேலும் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளார் லலித்குமாரும் வெளியிடுகின்றனர். இவ்விரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதால் இரண்டு படங்களுக்கும் அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ நேற்று அளித்திருந்த பேட்டி ஒன்றில், அஜித்தை விட விஜய் தான் முன்னணியில் இருக்கிறார். இருபடங்களுக்கும் சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது . இது குறித்து பேசுவதற்காக சென்னை செல்கிறேன் என தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் சென்னை வந்த அவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.