சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வரும் மஹேந்திர சிங் தோனி பல்வேறு துறைகளில் ஆர்வத்தை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் வகையில் சமீபத்தில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரின் அடைப்படையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் ஏற்கனவே தி ரோ ஆஃப் தி லயன் என்னு ஆவணப்படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணப்படத்திற்கு பிறகு தோனி தயாரிக்கும் முதல் படத்திற்கு LGM என பெயர் சூட்டியுள்ளனர். இத்திரைப்படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இத்திரைப்படத்தில் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
லெட்ஸ் கெட் மேர்ரிடு என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் பூஜையில் தோனியின் மனைவி ஷாக்ஷி கலந்து கொண்டார்.மேலும் ஹரிஷ்கல்யாண், நதியா, இவானா போன்றோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து வைத்துள்ளனர்.தோனியின் முதல் படமே தமிழில் உருவாக்கப்பட இருப்பதை அறிந்த ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.