இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்
தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் நித்யா மேனன்,ப்ரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்திருந்தனர்.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் அதில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மேலும் இத்திரைப்படம் மக்களிடையே பேராதரவைப் பெற்று அனைத்து உள்ளங்களிலும் மகத்தான இடத்தை பிடித்தது. தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே அதற்கென தனி வரவேற்பை பெற்றது. இதனிடையே இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷே எழுதி பாடியிருந்த தாய் கிழவி பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, மேலும் எனர்ஜிட்டிக் பாடலாகவும் வலம் வந்தது, இப்பாடல் இன்று 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தது. இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை பெற்று வருகிறது.
previous post