தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ், வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் வெற்றிப்படங்கள் வந்து பல காலங்கள் ஆன நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை உத்தமபுத்திரன் திரைப்படத்தை இயக்கி ஜவஹர் மித்ரன் இயக்கி இருந்தார். இதில் தனுஷுடன், நடிகை நித்யாமேனன், ப்ரியா பவானி ஷங்கர் ,ராஷி கண்ணா மற்றும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதற்கு பின்னதாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வாத்தி, இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியை கண்டெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடிகளை கடந்து வசூல் சாதனை தெலுங்கில் மட்டுமே கண்டுள்ளது, இருப்பினும் தமிழில் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர், இத்திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக களக்காடு புலிகள் காப்பகத்திற்கு அருகே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதனால் விலங்குகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் , படப்பிடிப்பு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், உயர் பீம் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி படப்பிடிப்பு எடுக்கப்படுவதால் யானை , புலி உள்ளிட்ட விலங்குகள் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும் , சுற்றுச்சூழல் பிரச்சனை அதிகம் ஏற்பட்டு வருவதால், படப்பிடிப்பு நடத்துவதற்கு முறையான அனுமதி இருக்கிறதா? கால்நடைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர் என பல தரப்பில் வனத்துறையினருக்கு புகார்கள் எழுந்து வரும் நிலையில் தற்காலிகமாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பட்ப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.