தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி வரும் திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே ஓரளவு வரவேற்பு பெற தொடங்கியிருக்கின்றன.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகர் கவின், நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் டாடா. இத்திரைப்படம் கவினின் திரைத்துறைப் பயணத்தில் மூன்றாவது படமாக அமைந்திருக்கிறது. இவர் நடிப்பில் இதற்கு முன் வெளியான நட்புன்னா என்னான்னு தெரியுமா திரைப்படத்தையடுத்து நடிகை அம்ரித்தா ஐயருடன் லிஃப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டாலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களையே பெற்று வந்தது. அத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது, புதுமுக இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் கவின் நடிப்பில் டாடா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் , டீசர், பாடல் என வெளியான அனைத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. சிலருக்கு இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததும் குறிப்பிடத்தக்கது. கவினின் ஆரம்ப கட்டப்பயணம் சின்னத்திரை நாடகங்களில் இருந்து தொடங்கியது, அதில் அவர் நடித்திருந்த வேட்டையன் என்னும் கதாபாத்திரத்துக்கு மக்களிடையே இன்றளவும் வரவேற்பு இருந்து வருகிறது.
அதற்கடுத்த கட்டமாக பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார் கவின், குறிப்பாக பெண்களின் ரசிகர் பட்டாளம் கவினுக்கு ஏகபோகமாக இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து டாடா திரைப்படம் வெளியான நாள் முதல் ஹவுஸ் ஃபுல்லாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, மேலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு திரைப்பிரபலங்கள் பலரும் தனுஷ் , கார்த்தி, உலக நாயகன் கமல் வரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படம் மூலம் கவின் அனைவரையும் கவர்ந்து தனது கெரியரில் உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் தனக்கான ரசிகர்களையும் அதிகரித்து கொண்டே வருகிறார். இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது,இதனிடையே இத்திரைப்படத்தை பலரும் ஓடிடி தளத்தில் எதிர்பார்த்து வரும் நிலையில், படக்குழு தற்போது அதன் அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதாவது கவினின் டாடா திரைப்படம் வரும் மார்ச் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.